Website counter

Sunday, September 4, 2011

ஒற்றுமையான சமுதாயம் ...

'மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்களே!' என்று அறிவிக்கிறது இஸ்லாம்.

'மனிதர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வில்லை. யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை. மேலும் படைக்கப் பட்ட உயிரினங்கள் பலவற்றை விடவும் மேன்மைப் படுத்தப் பட்டவர்கள் மனிதர்களே' எனவும் திருமறையும் நபி(ஸல்) அவர்களின் வாக்குகளும் தெளிவு படுத்துகின்றன.

உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும் நானே உங்கள் அதிபதி. எனவே நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். (குர்ஆன் 21:92)

"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்". (குர்ஆன் 49:13)

"மனிதர்களே! உங்கள் அனைவரையும் ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்" (குர்ஆன் 4:1)

"நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்." (குர்ஆன் 17:70)

"கறுப்பரை விட வெள்ளையரோ, வெள்ளையரை விட கறுப்பரோ சிறந்தவரல்லர்; அரபியரை விட அரபியல்லாதவரோ, அரபியல்லாதவரை விட அரபியரோ சிறந்தவரல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்". - நபிகள் நாயகம் (ஸல்)

படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான்நபிகள் நாயகம் (ஸல்) - நூல்: பைஹகி

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...